Posts

Showing posts from 2011

தொன்னூறுகளில் எனது கவிதைகள்

0தவளையின் கனவில்
     விரதப் பாம்புகள் .
     வண்ணத்துப் பூச்சியின் கனவில்
     கையில்லாச் சிறுவர்கள் .
     மானின் கனவில்
     புல் மேயும் புலிகள் . 
     எலியின் கனவில்
     நட்புடன் பூனைகள் .  


     நத்தையின் கனவில் 
     நாளைய தளிர்கள்.      தேனீக்களின் கனவில்       புள்ளிவட்ட முதல் துளி.   
    நாயின் கனவில்      நிமிர்ந்த  வால்கள்.      கோழியின் கனவில்      வானத்தில் நீச்சல் .
   மனிதனின் கனவில்     மற்றொரு கனவு .


2  0   வாய் பெயர்களைச்       சொல்லிச் சொல்லிப் பார்க்கிறது .      கண்கள் நான்கும் பேசிக்கொள்கின்றன       காதுகள் கொலுசின் ஒலியைத்தான்        சுவாசித்துக்கொள்கின்றன      மூக்கோ கூந்தலின்      மலர்மொழியை கேட்டு மயங்குகிறது .      மெய்யோ தனை மறந்து      பொய்யாகிப்  போகிறது .

எண்பதுகளில் எனது கவிதைகள்-5

பறையின் சித்திரங்கள் 


1 இடிகளின் முழக்கம் 
   திசையெல்லாம் அதிர்கிறது 
  அனலில் காய்ச்சிய பறை .


2 உயிரற்றுக்  கிடக்கிறது 
  கழட்டிப்  போடப்பட்ட 
   பறையின் தோல் .


3 இருந்த இசையை 
   விசைதான் வெளிக்காட்டியது 
   தோலிலும் கம்பிலும் .


4 எவ்வளவு வலிமை 
    இந்த ஒப்பாரிக்கு...
    பறையோடு இயைகிறதே !


5 தொண்டையைக் கனைத்து 
   சரிசெய்துகொள்கிறது ஊதி
   சீவாளிகளை மாற்றி மாற்றி .


6 ஒப்பாரியோடு சேர்ந்து 
   தானும் அழுகிறது 
   மழையில் நனைந்த பறை 


7 காற்றில் துடித்துவரும் 
   பறையில் மயங்கியது குயில் 
   சேர்ந்து பாடலாமா ....எனது மேடைக் கவிதைகள் -1

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற  பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை


0

எனது கவிதைகள்

எண்பதுகளில் எனது கவிதைகள்-4 


௦ ௦ 1 காட்டுச் சிறுவர்கள் 
      எண்ணி விளையாடுகிறார்கள்
      பாம்பின் தடங்களை .


2   பனித்துளிகள் 
     முத்துக்கோர்த்திருக்கின்றன
     மிளகுக் கொடிகளில்.


 3  நீண்ட இரவுச் சாலையில் 
    இரு சக்கர வாகன ஒளியில் 
    குறுக்கே நழுவும் பாம்புகள் .


4 சில்லுவண்டுகளின் பேரிரைச்சல் 
     நின்றதொரு காட்டில் 
     அலறுகிறது நிசப்தம் .


5   முளைத்துக் கிடக்கின்றன 
     நவதானியத் தளிர்கள் 
      மூன்றாம்நாள் தெளித்த பால் .


6    தூரத்தில் தெரியும் 
      அருவியின் சாரல், 
      நீர் புகைகிறது 


7   கிளிகள் எல்லாம் 
     ஆண்பால்தான் ,
     கனிகளைக் கேளுங்கள் .  


8  ஒப்பாரியோடு சேர்ந்து 
    தானும் அழுகிறது 
    மழையில் நனைந்த பறை .

Silent short story

nksdr; rpWfij
mtSk; me;j VO ehl;fSk;
gbg;gjw;F Kd; xU Ntz;LNfhs;.       ,J nksdr;rpWfij . Ngr;R, th;zid, tpthpg;G, ctkk;, vz;zXl;lk; Nghd;w fijnrhy;Yk; cgfuzq;fs; VJkpd;wp Gwf;fhl;rpfshy; kl;LNk mLf;fg;gl;L ,aq;fpr;nry;Yk; fij ,J. ,e;jf; ;fijap;d; thpfis tof;fk; Nghy; thrpf;fhky; xt;nthU thh;j;ijiaAk; thpiaAk; thrpj;jgpd; epWj;jp mtw;iw mff;fhl;rpfsha; czh;e;J gpd; mLj;j thh;j;ijf;Fr; nry;Yq;fs;. ,t;tifapy; ,f;fij xU $l;Lg;gilg;ghspaha; ,aq;fpl thrfiuf; NfhUfpwJ.
          -----------------------------------------------------------------------------------------------


g]; te;J epw;fpwJ. mtd; VWfpwhd; .g]; efh;fpwJ g]; Xb epw;fpwJ.mts; VWfpwhs; .VwpaJk; mtd; gf;fk; ghh;f;fpwhs;.mtDk; ghhf;;fpwhd;. NgUe;J epiyaj;jpy; g]; epd;wJk; ,wq;fp ntt;NtW gf;fk; elf;fpwhh;fs;.

     fhiy nra;jpj;jhspd; jiyg;gpy; ‘Kjy;th; gjtpNaw;G’.g];]py; Vwpatis mtd; ghh;f;fpwhd;.mts; NtWgf;fk; ghh;j;Jtpl;L, mtd; jpUk;gpaJk; ghh;f;fpwhs;. mts; Kfj;jpy; Gd;dif.
kio.  Filfis gpbj;jgb Ml;fs;. rhiyapy; nts;sk;. kio. Jhwy;. ki…

MY POEMS-90'S

தொன்னூறுகளில் எனது கவிதைகள் -1


1ஆயபயன்  'புலி மானை துரத்தியது  மானும் மிரண்டு ஓடியது' 'பிறகேன் மானுக்கு அத்தனை கொம்புகள்? கூர் கூராய் கிளர்ந்து   கிளை கிளையாய்அடர்ந்து' மரங்களினிடையே சிக்கிக்கொண்டு  புலிக்கு வாகாய் உணவாகிட !
2அநிர்வாணி
உன் கொசுக்கள்  கூட்டமாய் கடிக்கின்றன என் நிர்வாணத்தை.  உன் பிழம்புகள்  எரித்து மலர்த்துகின்றன என் ஆடைகளை.  உன் சிறகசைப்புகள் அசாத்தியப்படுத்துகின்றன  என் இருத்தலை.  நடுக்கடல் குருவியாய் மாந்திப்போகிறேன் நான். உன் கடல் கடந்து மரிப்பேனா உன்னில் மூழ்கி உயிர்ப்பேனா தெரியலையே இன்னும் .

3 கொலுசுக்கால்களுடன் ஜல்     மெல்ல ஜல்     அடிவைத்து ஜல்      என் அறைக்குள்ளே ஜல்      நீ வந்தாய் ஜல் ஜல் .     மெல்ல எழுந்து      நான் வெளியே போனேன்     உள்ளே அவனும் அவளும் . 


MY POEMS-3

எண்பதுகளில் எனது கவிதைகள் -3  1 அடுத்த ஊருக்கு வண்டி தள்ளும்      கழைக் கூத்தாடிகள்       வழித்துணையாய் நிலவு .
2 நட்சத்திர வெளிச்சத்தில்     ஓற்றைப்பாதை முடிகிறது     மயானப்புகையில் .
3 வெட்டவெளி     பால்பொழியும் நிலவு     குழந்தையின் பசிக்குரல்.
4 பெரிதாகிக்கொண்டே வருகிறது      தென்னங் கிளையில்      ஆட்டின் கடிவாய் .
5 பூர்ணிமை நிலவு    பனி விழும் இரவு     என் கல்லறையில் நீ .
6  மயானக்கூரை     காற்றில் தடதடத்தது      ஒப்பாரியின் பிரதிகள் .


MYPOEMS-2

எண்பதுகளில் எனது கவிதைகள் -2
1 .நதி நீரின் மீது     மெல்ல மிதந்து வருகிறது     அக்கரையின் மணியோசை 
2 .வேகமாய் கீழே செல்லும்      தூறல் வரிகள்      நகரும் குடைகள் 
3 .நான்குவரி மின்கம்பிகள்     வரிசையாய் குருவிகள்     எங்கே என் வயலின் ?
4 .நகரத்தின் சாலைகளில்     வெளிர் மஞ்சள் புகை    மின்சார அந்தி .
5 .கற்றை இருட்டில்     மனசெல்லாம் வெண்மை     எங்கோ மல்லிகை .
6 .பௌர்ணமி நிலவுக்கு பயந்து      அசையும் மரத்தடியில்      ஒளியும் நட்சத்திரங்கள் .
7 . பருந்தின் கை நழுவ      விழும் கோழிக்குஞ்சு       கீழே முள்பத்தை.

MY POEMS

எண்பதுகளில் எனது கவிதைகள் 
1 படிவம் 

    பெயர் ;    ஆண் /பெண் ;    பிறந்த தேதி ;    மதம் ;    சாதி ;    தாழ்த்தப்பட்டவரா ?    ஆம் எனில்     யாரால் ?    எப்போதுமுதல் ?.

2  இலைகளை விலக்கி    தேடும் காற்று    குயிலின் பாட்டை.
2  தவளை   தண்ணீருக்குள் தாவ      தடுமாறியது நிலா .
4  நான் மழையை      ரசித்துக்கொண்டிருக்கிறேன் ,     தயவு செய்து     யாரும் என்னை     நனைத்து விடாதீர்கள் 
பூஞ் செடிகளைச்சுற்றி   அரும்பியிருக்கும்    சின்னச்சின்ன புற்களை    நான் பிடுங்குவதேயில்லை 
அசைந்தபடி ஊ ஞ்சல்     பாதி தொடுத்த பவளமல்லி   மிதந்த படி குளித்த வாசம்    மெல்லத் தேயும் கொலுசொலி    ஒ என்னைக்கண்டதுந்தான்   நாணத்துடன்  எழுந்து போயிருக்கிறாள்,   மீதமுள்ள பூக்களில்    எனக்காக   தன புன்னகை முகத்தை    வைத்துவிட்டு .
எனது மொழிபெயர்ப்புகள்-1 இடதுசாரிகளிடமிருந்து எங்கள் வெளியேறலே தலித் இலக்கியத்தின் ஆரம்பம்

Image
வெமுல எல்லய்யா நேர்காணல் 
                                                                      - டாக்டர் கே.புருஷோத்தம் - ஜே.பீமய்யா
                                                                        தமிழில்- பன்னீர்செல்வன் அதிபா
வெமுல எல்லய்யா
தற்காலத் தெலுங்கு எழுத்தாளர்களுள் மிகுந்த நம்பிக்கை வெளிச்சத்தோடு வெளிப்பட்டிருப்பவர்களில் ஒருவரான எல்லய்யா (1973 ) மாதிகா என்ற தலித் பிரிவைச் சார்ந்தவர். தெலுங்கில் முதுகலைப் பட்டம் பெற்று தற்போது அதில் பி.ஹெச்.டி ஆய்வை மேற்கொண்டிருப்பவர். இதுவரை கக்கா (2000), சித்தி ( 2004) ஆகிய இரண்டு தலித் நாவல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது நிறைய தலித்திய கவிதைகள் தினசரிகளிலும் தொகுப்புகளிலும் வெளியாகியுள்ளன. மேடைக்கலையில் தனக்கிருக்கும் அனுபவத்தின் வாயிலாக    தன் நாவல்களில் தலித்திய தெருநாடக பாணியிலான விவரிப்புகளை கையாளுகிறார்.
***
தலித் இலக்கியத்தை தொடங்கிவைத்த அர்ஜுன் டாங்ளே, பாகுராவ் பாகுல் போன்ற எழுத்தாளர்கள் இடதுசாரி இலக்கியங்களே தலித் இலக்கியத்திற்கு முன்னோடி என்று மதிப்பீடு செய்கின்றனர். தலித்தியமும் மார்க்சியமும் ஒன்றுக்கொன்று எதிரிடையாய் நிறு…