Posts

Showing posts from April, 2012

சாமியாடி

தினமலர் வாரமலர் சிறுகதைப்போட்டியில்
                      முதலிடம் பெற்ற கதை
                         ( அக்டோபர் 1994 )


சாமியாடி கூட்டு வண்டியில் வந்து இறங்கினார்.  வேளார் மனையில் இருந்த எல்லா வேளார்களும் ஒருமிக்க கூடி துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு குனிந்து கும்பிட்டனர்.

சாமியாடி பெரமய்யா என்றாலே எல்லாவற்றையும் மீறிய ஒரு மரியாதை சுத்து பத்து அத்தனை கிராம மக்களுக்கும் உண்டு.

பூவனப்பட்டியின் குதிரையெடுப்புச் சாமியாடி அவர்.  நெடுநெடுவென வளர்த்தி.  இருந்த சதைப்பூச்சு அங்கங்கேசுருங்கிப் போய் கனிந்து சுருங்கிய பேரிச்சம் பழத் தோலை ஞாபகப்படுத்தும்.

அள்ளி முடிந்த முரட்டுக் கூந்தல், நீண்ட முகத்தில் துருத்திய தாடை, வளர்த்தியைச் சரிக்கட்ட கொஞ்சமாய் முன்வளை வடித்த முதுகு.  நிறைய வரி மடிப்புகளோடு பெரிய வயிறு.  இந்த அறுபது வயது முதுமையிலும் அசந்துபோய் மூலையில் குந்தாத ஜீவனுள்ள சரீரம்.

மூன்றடி நீளம், அரை அடி அகலத்தில் பெரிய அரிவாளைத் தூக்கிக் கொண்டு, நாக்கைத் துருத்தி, ஆகாயத்தைப் பார்த்து உருட்டிய விழிகளை மேல் இமைக்குள் செருகியவாறே, சன்னமாய் ஆரம்பித்த விசில் சத்தம் ரொம்ப உயர்ந்து கொடூரமாய்ப் பீற…

பாலாவின் விரல்களின் குரல்கள்

Image
கவிஞர் தங்கம்மூர்த்தி தொகுத்துள்ள கவிதைவெளியினிலே நூலில்
                                      நான் எழுதியுள்ள முன்னுரை


மிழ்க்கவிதை, தனது உணர்ச்சியின் திவலைகள் சொட்டி நனைந்த காவியப் படிமானங்களிலிருந்தும், மண்ணில் கால்பதிக்காத அதீத கற்பனாவாதத்திலிருந்தும், மக்களை மறுதலித்த நிலஉடைமைக் கால கருத்தோட்டங்களிலிருந்தும், மொழியின் பூட்டப்பட்ட சட்டகங்களிலிருந்தும் வெளியேறவேண்டிய நிர்பந்தத்தை முதலில் எதிர்கொண்டவன் பாரதி.  அவன்தான் புதிய யுகத்திற்கான கவிதை மொழியோடு தமிழின் நவகவிதையை ஆரம்பித்து வைத்தான்.

தொடர்ந்து இந்தியத் தத்துவச் சாயலோடும், தமிழ் மரபின் ஓசையோடும் ‘எழுத்து” மற்றும் பிற கவிதை இயக்கங்கள் எழுச்சி பெற்றன.  பழைய வடிவம் மற்றும் உள்ளடக்கத் தளைகளிலிருந்து கவிதையை விடுவிக்க அவர்கள் தம் “புதுக்குரல்”;களால் முயற்சித்தனர்.

அவர்களுக்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று புத்தாக்கம் செய்யப்பட்ட படிம, உருவக அழகுகள் கொண்ட வடிவத்தோடும், மனித குலத்தின் மாபெரும் துயரங்களுக்கு மாற்றுகாண விழைந்த உள்ளடக்கத்தோடும் வானம்பாடிகள் தங்கள் இயங்குதலை ஆரம்பித்தனர்.  இடதுசாரி கருத்தமைவுகளோடு கூடிய உணர்ச்சிகளை கவித…

கூடங்குளம்

கடைசியாய்
 சாட்டையைச் சுழற்றி விட்டது அரசு


மக்கள் ஆட்சி மக்களை ஆளும் ஆட்சியாகவே 
வழக்கம் போல் தொடர்கிறது .


அடைக்கலம் தேடிக்கூடிய ஆட்டுக்குட்டிகளை 
விரட்டியடிக்க இராணுவமேய்ப்பர்கள்.


தேர்தல் உட்பட
அரசின் செயல்பாடுகளுக்கும்
மக்கள் விருப்பத்திற்கும்
எவ்வித தொடர்பும் இல்லையென்பது
மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


மௌன அஞ்சலி போன்ற கூட்டத்தின்  
ஒற்றைக்  குரல் தீர்மானங்கள் 
போர்முழக்கங்களை   
மௌன ஒப்பாரிகளாய் மாற்றியிருக்கின்றன.


ஐம்பது ஆண்டு காலம் மட்டுமே 
இயங்கப்போகும் இது 
ஐயாயிரம் ஆண்டுகால பாதுகாப்பிற்கு
வைத்திருக்கிறது உலை.


இன்றைய வெளிச்சங்களை அறுவடை செய்ய
நாளைய இருட்டுகளை 
விதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


பட்டினியால் தங்கள் வயிறுகளை 
நிரப்பிக்கொண்டு போராடியவர்கள் 
இனி பயத்தால் நிரப்பிக்கொள்வார்கள்
யாரிடம் போராடுவது என அறியாமல் .