கூடங்குளம் - ராசி. பன்னீர்செல்வன்

பன்னீர்செல்வன் அதிபா பக்கங்கள்

Tuesday, 3 April 2012

கூடங்குளம்

கடைசியாய்
 சாட்டையைச் சுழற்றி விட்டது அரசு


மக்கள் ஆட்சி மக்களை ஆளும் ஆட்சியாகவே 
வழக்கம் போல் தொடர்கிறது .


அடைக்கலம் தேடிக்கூடிய ஆட்டுக்குட்டிகளை 
விரட்டியடிக்க இராணுவமேய்ப்பர்கள்.


தேர்தல் உட்பட
அரசின் செயல்பாடுகளுக்கும்
மக்கள் விருப்பத்திற்கும்
எவ்வித தொடர்பும் இல்லையென்பது
மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


மௌன அஞ்சலி போன்ற கூட்டத்தின்  
ஒற்றைக்  குரல் தீர்மானங்கள் 
போர்முழக்கங்களை   
மௌன ஒப்பாரிகளாய் மாற்றியிருக்கின்றன.


ஐம்பது ஆண்டு காலம் மட்டுமே 
இயங்கப்போகும் இது 
ஐயாயிரம் ஆண்டுகால பாதுகாப்பிற்கு
வைத்திருக்கிறது உலை.


இன்றைய வெளிச்சங்களை அறுவடை செய்ய
நாளைய இருட்டுகளை 
விதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


பட்டினியால் தங்கள் வயிறுகளை 
நிரப்பிக்கொண்டு போராடியவர்கள் 
இனி பயத்தால் நிரப்பிக்கொள்வார்கள்
யாரிடம் போராடுவது என அறியாமல் .


  


 


      

No comments:

Post a Comment