Posts

Showing posts from 2013

ஊழலற்ற இந்தியாவை உருவாக்க உடனடிச் சாத்தியம் மிக்க ஒரு முன்மொழிவு

இன்றைய நாட்களில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எதிரான சவால்களில் மிக முக்கியமானது சகல மட்டங்களிலும் நிரம்பியிருக்கிற ஊழல். ஊழலுக்கெதிரான வலுவான குரல்களும் இயக்கவழிப்போராட்டங்களும் நாடெங்கிலும் எழுவதும் பின் நுரைத்துப்பொங்கும் பால் நீர்த்துளிகளால் அடங்கிப்போவதைப்போல் நீர்த்துப் போவதுமான காட்சிகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

   இயல்பில் அநீதிக்கு எதிராக வெகுண்டெழும் மனத்தன்மை கொண்ட இளைஞர்கள் தற்கால ஊடக வலிமையினால் உடனுக்குடன் ஒருங்கிணைந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் .முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இவ்வெழுச்சிகள் அமைகின்றன. யார் முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பது கூட முக்கியம் இல்லாதபடிக்கு ஒரு ரோபோ ஊழலை எதிர்த்து இயக்கம் நடத்தினாலும் அதன் பின்னே ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணிவகுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

  இச்சூழலில் சட்டப்பூர்வமாக இயங்கும் இலஞ்ச ஒழிப்புப்பிரிவோ கைக்குட்டையால் முகம் மறைத்துச் செல்லும் சில சில்லரைத்திருடர்களை கைது செய்வதையே தனது கடமையின் எல்லையாக வரையறுத்துக்கொண்டிருக்கிறது . பாராளுமன்ற அமைப்பின் வழி திட்டமிடப்படுகிற பலவகை லோக்பால் முறைகள் …

இச்சாதாரி அரவங்கள்.

1)பச்சை இருள் அப்பிக்கிடக்குமொரு
பகல் காட்டில்
உச்சித்துளைகளின் வழியாய்
சொரியும் சூரியனில்
நனைந்தபடி கிடக்கிறேன் நிர்வாணியாய்…

எழுந்து நின்றாடி இயங்கி முயங்கும்
இச்சாதாரி அரவங்களின் அரவம்

சிற்றலகு பிளந்து நாத்துடிக்கும்
பிஞ்சுக் குஞ்சுகளின் கீச்சொலி நீங்காது
இரைசேர்க்கும் பெண் புள்.

குட்டிகளைத் தன்னோடு ஒட்டிக்கொண்டு
உச்சிக்கிளை வளைத்தாடும் மந்தி

வளைத்ததில் சிதறி பின்
வடிவமாய் அடைசேரும் தேனீ

இன்னபிறவும் சேர்ந்து
கொசுக்களாய்ப் பிடுங்குகின்றன
என் நிர்வாணத்தை.2)வானம் பெயர்ந்து விழுந்ததென
ஒருவன் வதந்தி கிளப்பினான் .

பெரிய பெரிய சாக்குகளோடு
ஊரே திரண்டது ...

நட்ச்சத்திரங்களை சேகரிக்க .

பொறுக்க வந்தவர்களை
அவர்களது சாக்குகளிலேயே
அள்ளிக்கொண்டு போனான்
வதந்தியாளன் .3)வெள்ளித்திரையின்
ராட்சத மார்களை
இமையுதடுகளால்
சப்பி அருந்திய
காட்சிப்பால்
கசிந்து கசிந்து பிசுக்கேறிய
கண்களைத்திற .....

.சக,

விலக்கப்பட்ட கனியின்
விதைதான் என்றாலும்
நீ அங்கீகரிக்கப்பட்டவன் .

எனது முகநூல் பக்கங்கள்

1 இருண் ட காலமா ?

2004 ல் தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்குவதற்காக
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத துறையால் 
ஆதாரமாக கொள்ளப்பட்ட 
தமிழ் நூல்கள் 41.

பத்துப்பாட்டு -10
எட்டுத்தொகை -8
பதினெண் கீழ்கணக்கு --18
பெருங்காப்பியம் --2
(சிலப்பதிகாரம் ,மணிமேகலை )
தொல்காப்பியம் --1
முத்தொள்ளாயிரம் --1
புறப்பொருள் வெண்பாமாலை --1

இவற்றுள் 18ம் 2ம் ஆக 20 நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியவை . (ஏறத்தாழ 50%)

நாமோ கொஞ்சமும் கூசாமல் களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம் .

(வேறொன்றுமில்லை களப்பிரர்கள் புத்த சமண சமயங்களை ஆதரித்தார்கள் ..அவர்களும் அச்சமயங்களும் அகன்ற பின்னர் வந்த இந்து சனாதனிகள் திரித்து வைத்த சரடு அது .)


2 மகாப் பேறு 
மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு  6 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது .

இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது .

அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து
பதவி விலகி விடவேண்டும் .

அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர்
குழந்தை பிறந்தபிறகு தங்…

To the Desks of Indian media

Image
Forensic Expert extends help to estimate the age of suspected Juvenile involved in Delhi Gang-rape case
Dr Jayakumar Jayaraman, an expert in Forensic age assessment has extended his willingness to estimate the age of the suspected juvenile in Delhi rape case. He is involved in this field of research for more than 5 years and he is working with the Dental Age Assessment Team (DAAT) in London, United Kingdom. He is recently appointed as a representative to the United Nations from a Brazilian organization where he works for Age Assessment for Climate Change Refugees. Dr Jayakumar is currently pursuing Doctorate degree in theUniversity of Hong Kong

                                                Dr Jayakumar Jayaraman ( Pudukkottai, Tamilnadu)
 Background  In the Delhi gang-rape case, there is no clear indication on the exact age of the juvenilewho claims his age as 17 years and 6 months years. Following this, the court has inquired the possibilities for finding the exact age of the suspec…