Posts

Showing posts from 2014

முத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்

-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா)

( செம்மொழித்தமிழ்  உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது   உரை- ஜனவரி 2014, புதுக்கோட்டை)
---------------------------------------------------------------------------------------------------------------

மனிதகுல நாகரிகம் நதிக்கரையில் தோன்றி வளர்ந்ததென்று பார்க்கிறோம். உணவு தயாரிக்கவும், உடை உடுத்தவும், இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதுமான அடிப்படை தேவைகளையும் - உற்பத்தி முறைகளையும் அறிந்து கொண்டது மட்டும் நாகரிகமல்ல. ஆண் பெண் தாம்பத்ய உறவை முறைப்படுத்திக் கொண்டதும், மொழியை வடிவமைத்து சிந்தனைக்கு உருவங்கொடுத்தும் தான் உண்மையான நாகரிகம்.

அம்மாதிரியான மொழி நாகரிகத்தில் உலக அளவிலான மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, சீனம், வடமொழி ஆகியவற்றோடு கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாய் ஊடாடி இன்றைக்கும் மொழிகள் குலத் தனி விளக்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பது தமிழ்.

கிரேக்கமொழி ஹோமரின் இலியட்;, ஒடிசி ஆகிய மகாகாவியங்களாலும் ஹெரடோட்டஸின் வரலாற்றுப் பதிவுகளாலும், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவ நூல்களாலும் சிறந்திருந்த காலம்…

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

Image
இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன்.
'எளவட்ட முறுக்கிலே எவளோடயாவது போறவன்... கம்மாக்கரை, கிணத்தடி, படப்படிப் பக்கம் போயிறுங்க. தப்பி நடந்தா... காளி கண்ணைக் கெடுத்திடும்’ என்பார்கள். மற்றபடி பகம் பூராவும் வெட்டுச் சீட்டு, ரம்மி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் நடக்கும். தென்புறம் இருளாண்டித் தேவர் படுத்திருந்தார். அவர் தலைமாட்டில் கந்தையாத் தேவர். வட ஓரம் ஏழு பேர் ரம்மி, ஏழு பேரில் இருளாண்டித் தேவர் மகன், மகள் புருஷன், கந்தையாத் தேவர் மகன், தம்பி மகன் ஆடிக் கொண்டிருந்தார்கள். மேலப்புறம் வெட்டுச் சீட்டு, கிழக்கே பத்ரகாளி பார்வையில் தாயக் கட்டம். இருளாண்டித் தேவரின் கால்மாட்…

வனம்மாள் - அழகிய பெரியவன்

Image
0   சிறுகதை   சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள். சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுட ன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும் கருஞ்சுவாலைக் கூட்டம்போல தூரத்தில் ஊசிமலை அவளுக்குத் தென்பட்டது.
வயோதிகத்தின் நியதிகளைத் தட்டாமல் ஏற்றிருந்த சாலம்மாளின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது. முந்தானையைச் சுருட்டித் தலைச்சும்மாடாகவும், முக்காடாகவும் மாற்றிக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே பேசியபடியும் போய்க்கொண்டிருந்தாள் அவள். இரண்டு மூன்று குடங்கள் சுமந்து வந்ததற்குள் களைத்து ஒரு மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.
வெப்பக் காற்று மாந்தளிர்களில் பட்டு…

மகாகவி பாரதியின் இரண்டு கடிதங்கள்

Image
தம்பி விசுவநாதனுக்கு கடிதம் புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918 ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனால் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப்  பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்த…

நா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை

Image
நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருக்கும் முகவுரை - (“பூ“ திரைப்படக் கதாசிரியரும் இவரே என்பது ஒரு கூடுதல் தகவல்) -------------------------------------------------------- எங்கெங்கோ அழைத்துச்செல்லும் கட்டுரைகள்        கவிஞர் தோழர் நா.முத்துநிலவனின் இக்கட்டுரைத்தொகுப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தொகுக்கப்படும்போதுதான் எழுதியவருக்கு (தனக்கே) ஓர் அடையாளம் கிடைக்கும்.இந்தப் பதினாறு கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற  சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே நடந்து செல்வதால் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டாக ஒரு முக்கியத்துவம் இத்தொகுப்பிற்குக் கிடைக்கிறது. ஒரு பெண்ணை அவள் பெண் என்பதாலேயே இச்சமூகம் அவளை நடத்தும் விதமும்  அதில் உறைந்திருக்கும் பாலியல் வன்முறையும் ஆணாதிக்க உளவியலும் இன்றைய தமிழ்ப் பெண்கவிகளின்   கவி…

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி பரிசுத்தொகை ரூ 50000

Image
;

பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் .

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய -மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .

0 அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டியினை கீழ்கண்ட 25 தலைப்புகளில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது .

0 ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்

0 தேர்வு பெறும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்

0 தேர்வு பெறும் கட்டுரைகளை புதுக்கோட்டையில் எதிர்வரும்அக்டோபர் (2014 ) மாதத்தில்
நடைபெறும் மூன்று நாள் சிறப்புக் கருத்தரங்கில் சமூகவியல் ஆய்வில் புகழ்பெற்ற படைப்பாளுமைகளின் தலைமையிலும் விமர்சனத்திலும் வாசித்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும்

0 தேர்வு பெறும் கட்டுரைகள் அனைத்தும் புகழ்பெற்ற புத்தக நிறுவனத்தால் தனி நூலாக வெளியிடப்படும்

0ஆய்வுக்கட்டுரைகளை A 4 தாளில் 10 முதல் 15 பக்க அளவினை கொண்ட தட்டச்சுப் பிரதிகளாய்
(குறுந்தகடுகளுடன் )…