Posts

Showing posts from February, 2014

முடியுமென்றால் சொல்

உன்னை "சகோதரா " என்றழைக்கவே
ஆசைப்படுகிறேன் ...

அச்சொல் உனக்குள்
என்னவோ செய்யுமென்பதையும்
விண் விண் னென்று காதுகள்
விடைத்துத்  தெறிக்கும்  என்பதையும்
நான் அறிவேன் ..

என்றாலும் என் ஆசையை
விட்டுவிட நான் விரும்பவில்லை

சகோதரா ,

கோடு போடுதலை விட
ரோடு போடுதல் பெரிது

ஒப்பித்தலைவிட
உண்டாக்குதல் பெரிது

நெற்றி சுருக்கத்தை விட 
நெற்றி வியர்வை பெரிது

உணவு மேலாண்மையை விட
உற்பத்தியே பெரிது

உலகச்  சுகாதார உச்சிமாநாட்டை விட
ஊரைத்  துப்புரவு செய்தல் பெரிது


மத சாஸ்திரங்களை விட
மனித அன்பு பெரிதோ பெரிது .

உன்னால் முடியுமென்றால் சொல்
பெரிதுகளை செய்து காட்ட  .....


சரியென்று வருவாயெனில்

பிறகென்ன ,
நீக்கி விடலாம் எல்லா
சலுகை மயிர்களையும் .


இச்சாதாரி

நடு நிசியில் மடல் அவிழும் 
தாழையின் உடலேறி 
ஊர்ந்து நழுவி 
ஊர்ந்து நழுவி 

இச்சாதாரி 
இசைக்கும் பண்ணில் 

இரவின் வனமெங்கும் 
குளிரோடு தாழை வீச 

நட்சத்திர அகல்கள்
நடுங்கிக் கண் செருக

பனியின் தூபத்தில்
வெந்தனல் கமழ

முயங்க நோக்கும்
ஊரெல்லாம் ...!

கன்னிமை --கி .இராஜநாராயணன் சிறுகதை

Image
கன்னிமை  --கி .இராஜநாராயணன் 

      சொன்னால் நம்பமுடியாதுதான்!     நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று 
     நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்.  ‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக் கொண்டாள்
அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு  நிகர் அவளேதான்.
அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள் குடும்பத்துக்கே பொன் நாட்கள்.
வேலைக்காரர்களுக்குக்கூட அவளுடைய கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி. 
நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகு வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்துக் கொண்டுவந்து விடுவாள். சருவச் சட்டியிலிருந்து வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, அண்ணாந்து கஞ்சியை விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால், ‘நாமும் அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று த…

'ஜன கண மன' முடிவல்ல தோழர்களே. அது ஆரம்பம் .

நம் தேசிய கீதத்தை பாடுவது தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் அரசாணைகளையும் அவற்றில் உள்ள அனைத்து விதிகளையும் படித்து விட்டேன் .

அதில் எந்த ஒரு இடத்திலும் தேசிய கீதத்தை கடைசியில் தான் 
பாடவேண்டும் என்ற எந்த விதியும் இல்லை .

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பள்ளிகளில் தேசிய கீதத்தை ஆரம்பத்திலேயே குழுவாகப் பாடி அந்நாளின் 
பணிகளை தொடங்க வேண்டும் என்று அரசாணையின்
அத்தியாயம் மூன்றில் விதி 5ன் படி சொல்லப்பட்டுள்ளது .

'ஜன கண மன' முடிவல்ல தோழர்களே. அது ஆரம்பம் .

ORDERS RELATING TO THE NATIONAL ANTHEM OF INDIA
------------------------------------------------------------------------
The National Anthem of India is played or sung on various occasions.
Instructions have been issued from time to time about the correct versions of theAnthem, the occasions on which these are to be played or sung, and about theneed for paying respect to the anthem by observance of proper decorum on suchoccasions. The substance of these instructions has been embodied in thisinformation sheet for general informat…
Image
எனது மொழிபெயர்ப்புகள்-1
' இடதுசாரிகளிடமிருந்து எங்கள் வெளியேறலே   தலித் இலக்கியத்தின் ஆரம்பம் '
வெமுல எல்லய்யா நேர்காணல் 
                                                                      - டாக்டர் கே.புருஷோத்தம் - ஜே.பீமய்யா
                                                                        தமிழில்- பன்னீர்செல்வன் அதிபா
வெமுல எல்லய்யா
தற்காலத் தெலுங்கு எழுத்தாளர்களுள் மிகுந்த நம்பிக்கை வெளிச்சத்தோடு வெளிப்பட்டிருப்பவர்களில் ஒருவரான எல்லய்யா (1973 ) மாதிகா என்ற தலித் பிரிவைச் சார்ந்தவர். தெலுங்கில் முதுகலைப் பட்டம் பெற்று தற்போது அதில் பி.ஹெச்.டி ஆய்வை மேற்கொண்டிருப்பவர். இதுவரை கக்கா (2000), சித்தி ( 2004) ஆகிய இரண்டு தலித் நாவல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது நிறைய தலித்திய கவிதைகள் தினசரிகளிலும் தொகுப்புகளிலும் வெளியாகியுள்ளன. மேடைக்கலையில் தனக்கிருக்கும் அனுபவத்தின் வாயிலாக    தன் நாவல்களில் தலித்திய தெருநாடக பாணியிலான விவரிப்புகளை கையாளுகிறார்.
***
தலித் இலக்கியத்தை தொடங்கிவைத்த அர்ஜுன் டாங்ளே, பாகுராவ் பாகுல் போன்ற எழுத்தாளர்கள் இடதுசாரி இலக்கியங்களே தலித் இலக்கியத்…