Posts

Showing posts from 2015

இந்தியக் கோப்பைகள்

14.02.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்க கலை இலக்கிய இரவில் நான் எழுதி வாசித்த கவிதை
(அவை கிரிக்கெட் உலகக் கோப்பை நாட்கள்)
-------------------------------------------------------------------------------
0 கூடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம் --மக்களை
பிரித்துப் பார்க்கும் கோழைகளுக்கு எதிர்வணக்கம் .
சட்டையை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்
சாதியைப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர் வணக்கம்.
வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும்
ஓடும் ரத்தங்களுக்கு வணக்கம் .
வர்ண அணுக்கள் ஓடும் ரத்தங்களுக்கு எதிர் வணக்கம்
மேலும்
வணங்கத் தகுதியற்றோரை
வணங்காமல் இருப்பவர்களுக்கு வணக்கம் . 0 உலகக் கோப்பை விளையாட்டு
உங்கள் வீட்டுக்குள் நடக்கிறது
காடு கழனி குளத்தையெல்லாம்
கட்டாந்தரை பொட்டலாக்கி
கம்பு நட்டு கனவை வீசி
நீங்கள் ஆடும் விளையாட்டு
உங்கள் அறைகளில் நடக்கிறது .
கோப்பையைத் தக்க வைக்க
அனைவருக்கும் ஆசைதான் என்றாலும்
உலகக் கோப்பை ஒருபுறம் இருக்கட்டும்
இந்தியக் கோப்பைகளை கொஞ்சம் பார்ப்போம் 0 தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றிகோப்பைகளில்
நிரம்பி வழிகின்றன
மதுக்…

இந்தியக் கோப்பைகள்

14.02.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்க கலை இலக்கிய இரவில் நான் எழுதி வாசித்த கவிதை
(அவை கிரிக்கெட் உலகக் கோப்பை நாட்கள்)
-------------------------------------------------------------------------------
0 கூடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம் --மக்களை
பிரித்துப் பார்க்கும் கோழைகளுக்கு எதிர்வணக்கம் .
சட்டையை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்
சாதியைப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர் வணக்கம்.
வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும்
ஓடும் ரத்தங்களுக்கு வணக்கம் .
வர்ண அணுக்கள் ஓடும் ரத்தங்களுக்கு எதிர் வணக்கம்
மேலும்
வணங்கத் தகுதியற்றோரை
வணங்காமல் இருப்பவர்களுக்கு வணக்கம் . 0 உலகக் கோப்பை விளையாட்டு
உங்கள் வீட்டுக்குள் நடக்கிறது
காடு கழனி குளத்தையெல்லாம்
கட்டாந்தரை பொட்டலாக்கி
கம்பு நட்டு கனவை வீசி
நீங்கள் ஆடும் விளையாட்டு
உங்கள் அறைகளில் நடக்கிறது .
கோப்பையைத் தக்க வைக்க
அனைவருக்கும் ஆசைதான் என்றாலும்
உலகக் கோப்பை ஒருபுறம் இருக்கட்டும்
இந்தியக் கோப்பைகளை கொஞ்சம் பார்ப்போம் 0 தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றிகோப்பைகளில்
நிரம்பி வழிகின்றன
மதுக்…

தமிழ் இணையக் கல்விக்கழகத் தளம் -- இலக்கியப் பெருஞ் சாளரம்

சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் தனது தளத்தில் தமிழின் பொற் பெட்டகங்களாய் விளங்கும் மிக அரிய நூல்களை பதிவேற்றம் செய்திருக்கிறது .. அவைகளைப் படிப்பதற்கு சொடுக்கவும்

தமிழ் இணையக் கல்விக்கழக மின் நூலகம் 

டாக்டர் அம்பேத்கரின் இந்திய அரசியலை தீர்மானித்த பேருரைகள்

ந்தியா ஒரு படிநிலை சமத்துவமின்மையை  சமுக அடிப்படையாக கொண்ட நாடு .
தன்தலையில் இன்னொருவன் நிற்பதை  அனுமதித்துக் கொண்டே இன்னொருவனின்
தலையில் தான் நிற்பதில்  சுகம் காணுகிற முழுக்கவும் ஏற்றத்தாழ்வுகளால்
நெய்யப்பட்ட  கட்டமைப்பு கொண்ட நாடு .

 விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும் உயர்வும் விரும்பித் திணிக்கப்படும்
தாழ்வும் நிலவும் சமூகச் சூழலில்  அடைய வேண்டிய பொது லட்சியங்களைக்
குறித்தோ தகர்த்தெறிய வேண்டிய அதிகார வக்கிரங்களை குறித்தோ எந்தவொரு பொது
முடிவையும்   எட்டமுடியாத  நாட்டில்  புரட்சிக்கு மட்டுமல்ல ஒரு
நேர்மையான பிரச்சாரத்திற்குக் கூட சாத்தியமில்லை


இருந்தும் உலக அரங்கில் ஒரு வெற்றிகரமான மக்களாட்சி நாடாக இந்தியா
விளங்குவதற்கு காரணம்   கூறுபட்டுக் கிடக்கும் இந்திய மனத்தின்
உறுப்புகளை உரிய வடிவத்தில் ஓன்று படுத்தியிருக்கும்  இந்திய அரசியல்
சட்டம் .

எட்டு திசையிலும் மூர்க்கமாய் இழுக்கப்பட்டும்  இந்தியக் சமூகக் கயிறுகள்
இன்னும் அறுபடாமல் இருப்பதற்கு காரணம் மனித தர்மத்தின் நியதிகளால்
சனாதனத்தை உடைத்தெறிந்து அமைக்கப்பட்ட இந்து சட்ட தொகுப்புகள்.

வகுப்பு வாத பிரச்சினைகள்  வகுப்பு வாரி விகிதாச்சார பிரதிநிதித்துவம்
கோரும…

அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்

Image
மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.
நகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாம…